இசைஞானியைச் சிலாகித்து நிறைய பிரபலங்கள் பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறேன். 2014-ஆம் ஆண்டு ஒரு கோடை மழையில் பைக் பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட ஆத்மார்த்தமான உணர்வினை இங்கே பகிர்கிறேன்.
பெங்களூர்-சென்னை பயணம். அதிகாலை 5 மணிக்கு நான், எனது Bullet பைக், ராஜாவின் பாடல்கள் மூவரும் பயணமானோம். கிருஷ்ணகிரி வரையில் அவரது இசையானது என்னுடன் பயணமானது. செந்தமிழ்ப் பாட்டு படத்தின் "சின்ன சின்ன தூரல் என்ன.." பாடல் தொடங்கவும், தூரியது கருமேகம்.
பெங்களூர்-சென்னை பயணம். அதிகாலை 5 மணிக்கு நான், எனது Bullet பைக், ராஜாவின் பாடல்கள் மூவரும் பயணமானோம். கிருஷ்ணகிரி வரையில் அவரது இசையானது என்னுடன் பயணமானது. செந்தமிழ்ப் பாட்டு படத்தின் "சின்ன சின்ன தூரல் என்ன.." பாடல் தொடங்கவும், தூரியது கருமேகம்.
ipod-ஐ அணைத்து பைக்குள் வைத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன். இப்போது நான், Bullet மட்டுமே. ஒரு சில பாடல்களை சத்தமாக பாடியபடியும், lyrics தெரியாத இடங்களில் hum செய்தபடியும் பைக்கை விரட்டிக் கொண்டிருந்தேன். வான்மழைக்கு சளைக்காது என் உதடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக ராஜா சாரின் பாடல்களை முணுமுணுத்தது.
அப்போது தான் என்னையும் அறியாது பாடலின் இசையையும் சேர்த்தே நான் முணுமுணுப்பது தெரிந்தது. பல்லவிக்கு முன் வரும் prelude தொடங்கி சரணங்களுக்கு இடையில் வரும் interlude தொட்டு பாடலின் இறுதியில் ராஜா சாரின் trade mark end note வரையில் பாடல் முழுதையும் என் நாபிக் கமலம், தொண்டை, வாய், பற்களே orchestra arrangements-ஆக இசைத்தது என்றே கூற வேண்டும். நிறைய பாடல்களின் lyrics தெரியாவிட்டாலும் ராஜா சாரின் composition மட்டும் தாய்ப் பாலாக ரத்தத்தில் ஊறியிருக்கிறது. ஒரு கணம் இசைஞானியே என் பின்னால் பைக்கில் அமர்ந்து recording notes தொடுப்பது போலிருந்தது. எத்தனை பாடல்கள் முணுமுணுத்திருப்பேன் என நினைவில்லை. ராஜாங்கத்தில் இருந்து ஊனும் உயிரும் வெளியேறிய போது வீடு வந்திருந்தது. 412 கி.மீ. பைக் ஓட்டிய பயணக் களைப்பும் இல்லை.
நானும் புல்லட்டும் முழுதாக நனைந்திருந்தோம். எங்களோடு மழையும் நனைந்திருந்தது.. இசைஞானியின் இசைச்சாரலில்..!
-சுர்ஜித் குமார்
No comments:
Post a Comment